ADDED : நவ 19, 2024 11:57 PM

நெலமங்களா; பெண்ணைக் கொன்ற சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கோலர்ஹட்டியைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் எட்டு ராட்சத கூண்டுகள் வைத்து உள்ளனர்.
கோலர்ஹட்டியை சேர்ந்தவர் கரியம்மா 52, இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, புல் வெட்ட சென்றிருந்த போது சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.
கொலைகார சிறுத்தையை பிடிப்பதற்கு, நெலமங்களா தாலுகா, கோலர்ஹட்டி சுற்றியுள்ள வனப்பகுதியில் எட்டு இடங்களில் ராட்சத கூண்டு வைத்து உள்ளனர்.
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
சி.கே.பாளையா, ஹுரியப்பனபாளையா, கோலர்ஹட்டி ஆகிய கிராமங்களுக்கு தாசில்தார் அம்ரித் அத்ரேஷ் நேற்று வருகை தந்தார். கரியம்மாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
சிறுத்தையை பிடிக்கும் வரை அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்கு, முத்திரீஸ்வரர் தேரோட்டத்தை நடத்த வேண்டாம் என தாசில்தார் தெரிவிதது உள்ளார்.
படம் உள்ளது
20-hari-003
சிறுத்தையை பிடிக்க வைக்கபட்டுள்ள கூண்டு

