sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடியரசு தின விழாவின் கருப்பொருள் பெண் சக்தி!: கடமை பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு

/

குடியரசு தின விழாவின் கருப்பொருள் பெண் சக்தி!: கடமை பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு

குடியரசு தின விழாவின் கருப்பொருள் பெண் சக்தி!: கடமை பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு

குடியரசு தின விழாவின் கருப்பொருள் பெண் சக்தி!: கடமை பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு


ADDED : ஜன 27, 2024 12:48 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின், 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு, புதுடில்லியின் கடமைப் பாதையில் வெகு விமரிசையாக நேற்று நடந்து முடிந்தது. நம் வளமான பாரம்பரிய கலாசாரம், பெண் சக்தி மற்றும் ராணுவ வலிமை இந்த அணிவகுப்பில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

புதுடில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையுடன் குடியரசு தின விழா நேற்று துவங்கியது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இசை நிகழ்ச்சி


சில நிமிடங்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோர் பாரம்பரிய சாரட் வண்டியில் கடமைப் பாதையில் வந்திறங்கினர்.

ஜனாதிபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றினார். தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பின், 21 குண்டுகள் முழங்க, மூவர்ண கொடிக்கு ஜனாதிபதி முர்மு சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அப்போது, 'எம்ஐ17' ரக ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடி கடமைப் பாதையில் மலர்களை துாவின.

இதை தொடர்ந்து, முதன்முறையாக 100 பெண்கள் பங்கேற்ற பல்வேறு வகையான தாள வாத்தியக் கருவிகள் அடங்கிய, 'ஆவாஹன்' என்ற இசை நிகழ்ச்சி அரங்கேறியது.

இசை நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசு தின விழா அணிவகுப்பு துவங்கியது. ராணுவ லெப்டினன்ட் பாவ்னிஷ் குமார் அணிவகுப்புக்கு தலைமை வகித்தார்.

பிரான்ஸ் ராணுவத்தின் வீரர்கள் மற்றும் வாத்தியக் குழுவினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 16 அலங்கார ஊர்திகளும், மத்திய அமைச்சகங்களில் இருந்து ஒன்பது அலங்கார ஊர்தி களும் அணிவகுப்பில் பங்கேற்றன.

தமிழகம், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மணிப்பூர், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஆந்திரா, லடாக், குஜராத், மேகாலயா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்தன.

ரசித்தனர்


பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரிகள், துாதரக அதிகாரிகள் உட்பட பலர் அணிவகுப்பை பார்த்து ரசித்தனர்.

பெண் சக்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக, நம் முப்படைகளைச் சேர்ந்த பெண் வீராங்கனையர் முதன்முறையாக அணிவகுப்பில் பங்கேற்றனர்.

டி90 பீஷ்மா பீரங்கி வாகனங்கள், 'நாக்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, காலாட்படை போர் வாகனங்கள், அனைத்து விதமான நிலப்பரப்புகளில் இயங்கும் ஏ.டி.வி., வாகனங்கள்...

ஆயுதங்களை கண்டறியும் ரேடார் கருவியான ஸ்வாதி, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை முடக்கும் ஜாமர் கருவிகள், தரையில் இருந்து வானை நோக்கி சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட நம் ராணுவப் படை பலங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முப்படைகளைச் சேர்ந்த அனைத்து மகளிர் அணிவகுப்புக்கு, ராணுவ போலீஸ் பிரிவைச் சேர்ந்த கேப்டன் சந்தியா தலைமை வகித்தார். இவருடன், கேப்டன் சரண்யா ராவ், துணை லெப்டினன்ட் அன்ஷு யாதவ், விமான லெப்டினன்ட் ஸ்ருஷ்டி ராவ் ஆகியோரை மக்கள் கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர்.

இந்த அணிவகுப்பு முழுதும், 'வளர்ந்த பாரதம்' மற்றும் 'இந்தியா: ஜனநாயகத்தின் தாயகம்' என்ற கருப்பொருளில் இடம் பெற்று இருந்தன.

இரண்டு ரபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் விமானப் படையின் போக்குவரத்து வாகனமான, ஏர்பஸ் ஏ330 ஆகியவை அணிவகுப்பில் சிறப்பு கவனம் பெற்றன.

நம் விமானப் படை சார்பில், 29 போர் விமானங்கள், ஏழு போக்குவரத்து விமானங்கள், ஒன்பது ஹெலிகாப்டர்கள், ஒரு பாரம்பரிய விமானம் இடம் பெற்றன. 15 பெண் விமானிகள், விமான சாகசங்களில் ஈடுபட்டனர்.

நம் விமானப் படையின் 46 விமானங்களின் சாகசத்துடன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us