sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக கடும் அமளி

/

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக கடும் அமளி

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக கடும் அமளி

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக கடும் அமளி


ADDED : நவ 09, 2024 12:36 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றியதால் பதற்றம் நிலவியது.

ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது.

மத்திய அரசால், 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி, ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், கடும் அமளிகளுக்கு இடையே, சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்துக்கு மக்கள் ஜனநாயக கட்சி, அவாமி இத்தேஹாத் கட்சி ஆதரவு தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுக்கும் நேற்று முன்தினம் கடும் மோதல் ஏற்பட்டதால், சட்டசபை போர்க்களமானது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை நேற்று வழக்கம் போல் கூடியதும், சபையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முழக்கமிட்டனர். அப்போது, அவர்களுக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறப்பு அந்தஸ்தை திரும்பத் தரக்கோரி, மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் பேனரை பிடித்தபடி நின்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட்டனர்.

சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரசுக்கு மோடி எச்சரிக்கை

மஹாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரில் காங்., சதித் திட்டங்களை மஹாராஷ்டிரா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாடு ஏற்காது. மோடி இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரசால் எதுவும் செய்ய முடியாது. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் மட்டுமே அங்கு இயங்கும். எந்த சக்தியாலும் சட்டப்பிரிவு - 370ஐ திரும்ப கொண்டு வர முடியாது. பாக்., நிகழ்ச்சி நிரலை காங்., இங்கு முன்வைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us