ADDED : ஜன 29, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திப்ருகர்: வடகிழக்கு மாநிலமான அசாமில், கலாசார ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டை துவக்கி ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் எத்தனையோ நவீனங்கள் நிகழ்ந்த போதிலும், போர்கள் மட்டும் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
சமூக அளவிலும், தனிநபர்களிடமும் அகம்பாவமும், குறுகிய மனப்பான்மையும் மேலோங்கி உள்ளது. அத்தகைய போக்குகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என கூறிக் கொள்பவர்கள், தங்களுக்கென்று மற்றொரு குழுவை உருவாக்கிக் கொள்கின்றனர்.
இதற்கான நீடித்த தீர்வை கண்டறிவதில் மதங்கள் தோல்வியடைந்துள்ளன. உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்தபோதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்னைகளை இன்றும் எதிர்கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.