ADDED : செப் 17, 2025 12:36 AM

வெளிநாடுகளில் இருந்தபடி, நம் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்துவோரை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்காக, மத்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அனைத்து வகை போதைப் பொருட்களையும் ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
பொருளாதாரத்தை கெடுக்க சதி!
ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட போதும், பழங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அனுமதிக்கப்படாததால், வாகனங்களிலேயே பழங்கள் அழுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் பொருளாதாரத்தை கெடுக்க சதி நடக்கிறது.
ருஹுல்லா மெஹ்தி லோக்சபா எம்.பி., தேசிய மாநாட்டு கட்சி
இவ்வளவு காலம் என்ன செய்தீர்கள்?
பீஹார் மக்களை முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே, ஊடுருவல்காரர்கள் இருப்பதாக பிரதமர் மோடி சொல்கிறார். மத்தியில் 11 ஆண்டும், மாநிலத்தில் 20 ஆண்டுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் தே.ஜ., கூட்டணி, ஊடுருவல்காரர்களை வெளியேற்றாமல் என்ன செய்து கொண்டிருந்தது?
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்