இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்; பிரதமர் மோடி உத்தரவாதம்
இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்; பிரதமர் மோடி உத்தரவாதம்
ADDED : டிச 17, 2024 02:26 PM

ஜெய்ப்பூர்: வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.46,400 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கு முதல்வர் பஜன்லால் ஷர்மா மற்றும் அவரது குழுவினர் கடினமாக உழைத்துள்ளனர். ராஜஸ்தானில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. பா.ஜ., நல்லாட்சியின் அடையாளமாக மாறுகின்றன.
கட்சி தனது தீர்மானங்களை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளை மேற்கொள்கிறது. ராஜஸ்தானில் இன்று நடக்கும் நவீன வளர்ச்சிப் பணிகள் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். இது வளர்ச்சி அடைந்த மாநிலத்தை உருவாக்க உதவும். ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் போது இந்தியாவும் வேகமாக வளரும். வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்.
கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பா.ஜ., தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மிகவும் முக்கியம். ராஜஸ்தானில் மின்சாரத் துறையில் பா.ஜ., அரசு பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதனால் நமது விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.