தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இறுதி ஆசை நிறைவேறும்!

இறுதி ஆசை நிறைவேறும்!

இறுதி ஆசை நிறைவேறும்!


ADDED : பிப் 01, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 12:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஜித் பவாரின் இறுதி ஆசை, தேசியவாத காங்கிரசை ஒன்றிணைப்பது. தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 40 பேரும் அவரது கட்டளையை ஏற்பர் என அடிக்கடி கூறுவார். எங்கள் தரப்பில், இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இரு தரப்பிலும் அனைவரும் ஆதரவளித்தால், அவரது விருப்பம் நிறைவேறும்.

ஜெயந்த் பாட்டீல் மூத்த தலைவர், தேசியவாத காங்., சரத்பவார் பிரிவு

எதிர்காலம் கேள்விக்குறியாகும்!


யு.ஜி.சி., விவகாரத்தில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. இது, ஒவ்வொரு முடிவிலும் பிரதிபலிக்கிறது. சமூகத்திற்குள் பிளவுகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். அனைவரையும் உள்ளடக்கினால் தான், நம் நாடு சிறந்த நாடாக மாறும்.

கபில் சிபல் சுயேச்சை, ராஜ்யசபா எம்.பி.,

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!


கேரளாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசின் பட்ஜெட் நிரம்பியுள்ளது. இந்த அரசு, 3.5 கோடி மக்கள் மீது 5.5 லட்சம் கோடி ரூபாய் கடனை சுமத்தியுள்ளது. இதை யார் திருப்பிச் செலுத்துவர்? இது, எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும்.

ராஜிவ் சந்திரசேகர் தலைவர், கேரள பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us