ADDED : டிச 31, 2024 05:37 AM

தட்சிண கன்னடா: மங்களூரு சோமேஸ்வரா கடற்கரையில் அலையில் சிக்கிய சகோதரரின் மகளை காப்பாற்றிய சித்தப்பா, மற்றொரு ராட்சத அலையில் சிக்கி, உயிரிழந்தார்.
பெங்களூரு சிவாஜி நகர் எச்.பி.கே., சாலையில் வசித்து வருபவர் சாஜித், 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அலிமா ரஷிதா.
இவர்களுக்கு, கைரா பாசியா, ஹம்சன் அலி, ஹுசேன் அலி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தொழில் ரீதியாக, நான்கு ஆண்டுகளாக சாஜித் பெங்களூரில் தாயுடன் வசித்து வந்தார். மனைவி, குழந்தைகள் ஊரில் வசித்து வந்தனர். அவ்வப்போது, அவர்களை சென்று பார்த்து வந்தார்.
இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் உறவினர் வீட்டு திருமணத்துக்காக தனது அண்ணன் குடும்பத்தினருடன், மங்களூரு சென்றிருந்தார்.
திருமணம் முடிந்த பின், நேற்று முன்தினம் சோமேஸ்வரா கடற்கரைக்கு அனைவரும் வந்தனர்.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கடலில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அண்ணன் மகள் உமய் ஆயிஷா, அலையில் சிக்கி தத்தளித்தார். இதை பார்த்த சாஜித், மகளை காப்பாற்றினார். ஆனால், அடுத்து வந்த ராட்சத அலை அவர் மீது வேகமாக மோதியதில், நிலை குலைந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த உறவினர்கள், அவரை தெரலகட்டே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உல்லாள் போலீசார் விசாரிக்கின்றனர்.