
கடந்த மூன்று ஆண்டுகளாக பீஹார் முழுதும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளேன். ஆனால் ஒருபோதும்,
எனக்கு ஓட்டளிக்கும்படி கேட்டதில்லை. காரணம், ஓட்டுக்காக மக்களை
சந்திப்பவன் நான் அல்ல. இப்படி சொல்லி தான், மக்களை பலர் ஏமாற்றி உள்ளனர்.
பிரசாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ்
சிறிதும் புரிதல் இல்லை!
சர்வதேச விவகாரங்கள் பற்றி, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் எம்.பி., ராகுல் ஆகியோருக்கு சிறிதும் புரிதல் இல்லை. இந்த இருவரும், காங்., கட்சியை சிரிப்பு கூட்டமாக மாற்றி வைத்துள்ளனர். இவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை.
கேசவ் பிரசாத் மவுரியா, உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,
காங்கிரசின் ஏ.டி.எம்.!
தெலுங்கானாவில் ஊழல் மலிந்துள்ளதாக துவக்கத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வருகிறோம். தற்போது இதை நிரூபிக்கும் வகையில், பண மோசடி வழக்கில், முதல்வர் ரேவந்த் ரெட்டியே சிக்கி உள்ளார். தெலுங்கானாவை, காங்கிரசின் ஏ.டி.எம்., ஆக அவர் மாற்றி உள்ளார்.
கே.டி.ராமா ராவ், செயல் தலைவர், பாரத் ராஷ்டிர சமிதி