UPDATED : நவ 17, 2026 05:59 PM
ADDED : நவ 17, 2026 05:52 PM
புதுடில்லி: மஹாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்தவர், வடமேற்கு டில்லியில் கைது செய்யப்பட்டார்.
டில்லி, ஜஹாங்கிர்புரி போலீஸ் ஸ்டேஷனில், மஹாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுபாட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் ரோஹித்,22, என்ற வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் தேடி வந்தனர். மேலும், தாதா போலோ கும்பலுடனும், ரோஹித் நெருங்கிய தொடர்பில் இருந்தார். கடந்த, 2024ம் ஆண்டு ஜஹாங்கிர்புரியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரோஹித், மார்ச் 12ம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதே நேரத்தில், மஹாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு சட்டப் பிரிவில் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை அறிந்து தலைமறைவானார். இந்நிலையில், வடமேற்கு டில்லிய ஜஹாங்கிர்புரியில் பதுங்கி இருந்த ரோஹித்தை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
