ADDED : ஆக 11, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தாதா நந்து கும்பலைச் சேர்ந்த ஒருவரை துவார காவில் கைது செய்த போலீசார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
டில்லி மற்றும் புறகரில் மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத துப்பாக்கி விற்பனை உள்ளிட்ட வழக்குகளில், தாதா நந்து கும்பலைச் சேர்ந்த ஈஸ்வர் சிங் என்ற மோனு தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், துவாரகா அருகே தன் சொந்த ஊரான பர்தல் கிராமத்தில் இருந்த, ஈஸ்வர் சிங்கை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.

