ADDED : நவ 09, 2024 12:20 AM

ஹரியானாவில் காங்., படுதோல்வி அடைந்தது போலவே, மஹாராஷ்டிராவிலும், அக்கட்சியின், 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி தோல்வி அடையும். உத்தவ், சரத் பவார் போன்றோருக்கு, அவர்களின் மகன், மகள் நலனே முக்கியம். அவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
தந்திரங்களை செய்யும் காங்.!
ஓட்டு வங்கிக்காக சமூகங்களிடையே காங்., பிரிவினையை ஏற்படுத்துகிறது; இது நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு தீங்கானது. மஹாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற, பல்வேறு தந்திரங்களை காங்., நிச்சயம் செய்யும். அக்கட்சியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,
சித்தாந்தத்தின் சண்டை!
ஜார்க்கண்டில், பழங்குடியினரிடம் இருந்து நீர், நிலம், காடு ஆகியவற்றை பறிக்க, பா.ஜ., முயற்சிக்கிறது. இதை காங்., தடுத்து நிறுத்தும். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், 'இண்டி' கூட்டணிக்கும், பா.ஜ.-, - ஆர்.எஸ்.எஸ்., கூட்டணிக்கும் இடையேயான சித்தாந்தத்தின் சண்டை.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்