உலக அதிசயம் தாஜ்மஹால் முழுவதும் ஆங்காங்கே விரிசல்!
உலக அதிசயம் தாஜ்மஹால் முழுவதும் ஆங்காங்கே விரிசல்!
ADDED : செப் 22, 2024 04:17 PM

ஆக்ரா: இந்தியாவின் புகழ்வாய்ந்த அதிசயமாக இருக்கும் தாஜ்மஹால் பழுதடைந்து, கட்டடம் முழுவதும் ஆங்காங்கே விரிசல் விழுந்துள்ளது.
கடந்த வாரம் பெய்த மழையினாலும் சேதமாகி உளளது.பிரதான கட்டடத்தின் உச்சியில் செடி முளைத்திருப்பதை கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் சுட்டிக்காட்டினர். அந்த செடி அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் கசிவு காரணமாக, ஷாஜகான் கல்லறையில் தண்ணீர் தேங்கியுள்ளது.கட்டடத்தின் உச்சியிலும் சுவர்களிலும் பதிக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கற்கள் பெயர்ந்து விழுகின்றன.
இது குறித்து இந்திய சுற்றுலா வழிகாட்டி கூட்டமைப்பு பொதுசெயலாளர் ஷகீல் சவுகான் கூறியதாவது: தாஜ்மஹாலின் கல்லறை நுழைவு வாயில் கதவுகளில் குரான் பற்றி அரபிக் மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் காணவில்லை. அவை பொலிவு இழந்து அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டடத்தின் மேற்கு புறம் முழுவதும் விரிசல் விழுந்துள்ளது, என்றார்.
சுற்றுலா வழிகாட்டி நல அமைப்பின் தலைவர் தீபக் டேன் கூறியதாவது: தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்று. அதுகுறித்து தவறாக தெரிவித்துவிட்டால் அது வேகமாக பரவும். அது நாட்டிற்கும் சுற்றுலா தலத்திற்கும் பாதகமாக அமைந்துவிடும்,' என்றார்.