உலகமே இந்தியாவைக் கொண்டாடும் சூழல்: நட்டா மகிழ்ச்சி
உலகமே இந்தியாவைக் கொண்டாடும் சூழல்: நட்டா மகிழ்ச்சி
ADDED : மே 06, 2024 05:30 PM

ஹைதரபாத்: இன்று உலகமே இந்தியாவைக் கொண்டாடுகிறது என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் 11வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. இன்று நாம் உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டோம். மோடியை மீண்டும் பிரதமராக்கி, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற வேண்டும். இன்று உலகமே இந்தியாவைக் கொண்டாடுகிறது.
காங்கிரசை சாடிய நட்டா
தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு, பிரதமர் மோடி எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை. பாரத் ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் குடும்ப கட்சிகள். ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவ் மகள் சிறையில் உள்ளார். தற்போது ஊழல்வாதிகள் இணைந்து பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடை ரத்து செய்வார்கள் என பொய் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.