ADDED : ஜன 07, 2024 02:34 AM
சித்ரதுர்கா : தங்கள் மகளுடன் பேசிய இளைஞரை, அப்பெண்ணின் குடும்பத்தினர் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
சித்ரதுர்கா, ஹொசதுர்காவின், நாக நாயக்கனகட்டி கிராமத்தில் வசித்தவர் மனோஜ் நாயக், 23. இவர் இதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக இருந்தார்.
அவ்வப்போது பெண்ணை சந்தித்துப் பேசினார். இது பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.
தங்கள் மகளுடன் பேசக் கூடாது என, பல முறை மனோஜ் நாயக்கை எச்சரித்தனர். அவர் கேட்கவில்லை.
இதனால் கொதிப்படைந்த பெண்ணின் குடும்பத்தினர், இரண்டு நாட்களுக்கு முன்பு, மனோஜ் நாயக்கை சாலையில் மடக்கி, தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக, இந்திராபாய், சாவித்ரிபாய் உட்பட, ஐவரை, ஸ்ரீராம்புரா போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள ரகு நாயக் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.