ADDED : ஜூன் 09, 2026 06:17 AM

அடுத்த 80 நாட்களுக்கு தேவையான மின் உற்பத்தியை பூர்த்தி செய்வதற்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது-. சில ஆண்டுகளுக்கு முன், நிலக்கரி தட்டுப்பாடு இருந்தது உண்மை தான். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தட்டுப்பாடு சரி செய்யப்பட்டுள்ளது.
கிஷன் ரெட்டி மத்திய அமைச்சர், பா.ஜ.,
வாய்ப்பே இல்லை!
இன்றைய சூழலில் ஓட்டுச்சீட்டு முறையை பின்பற்றினால், பா.ஜ., வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் நடந்துள்ள குழப்பங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து மனு அளிக்க, 'இண்டி' கூட்டணி முடிவு செய்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் தலைவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கூட்டணியில் பிளவு!
'இண்டி' கூட்டணி என்று எதுவும் இல்லை; அது வெறும் கற்பனையே. பெயரளவில் மட்டுமே கூட்டங்கள் நடக்கின்றன. காங்கிரஸ் மற்றும் பிற மாநில கட்சிகள் இடையே தொடர்ந்து மோதல்கள் நிலவுவதால், அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. உறுதியான நிலைப்பாடோ, ஒற்றுமையோ அங்கு இல்லை.
செஷாத் பூனாவாலா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
