இண்டியா கூட்டணியில் குழப்பம் இல்லை: சொல்கிறார் சரத்பவார்
இண்டியா கூட்டணியில் குழப்பம் இல்லை: சொல்கிறார் சரத்பவார்
UPDATED : ஜன 13, 2024 07:30 PM
ADDED : ஜன 13, 2024 05:58 PM

மும்பை: ‛ இண்டியா' கூட்டணிக்கு அமைப்பாளராக யாரை நியமிப்பது என்ற விவகாரத்தில் குழப்பம் ஏதும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில், நிதீஷ்குமாரை அமைப்பாளர் ஆக நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நிதீஷ்குமார் அமைப்பாளர் பதவி தேவையில்லை. அதற்கு பதிலாக கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவை அமைக்கலாம் என கூறிவிட்டார். இதில் கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை.
கூட்டணி மற்றும் லோக்சபா தேர்தலுக்கு தயார் ஆவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. யாரை முன்னிலைப்படுத்தியும் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு பிறகு தலைவர் தேர்வு செய்யப்படுவார். மத்தியில் மாற்று அரசு அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 1977 தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் மொரார்ஜி தேசாயை பிரதமர் வேட்பாளர் ஆக முன்னிறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.