sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவிலில் ஆடை கட்டுப்பாடு இல்லை ஹிரேமகளூரு கண்ணன் ஆதங்கம்

/

கோவிலில் ஆடை கட்டுப்பாடு இல்லை ஹிரேமகளூரு கண்ணன் ஆதங்கம்

கோவிலில் ஆடை கட்டுப்பாடு இல்லை ஹிரேமகளூரு கண்ணன் ஆதங்கம்

கோவிலில் ஆடை கட்டுப்பாடு இல்லை ஹிரேமகளூரு கண்ணன் ஆதங்கம்


ADDED : பிப் 12, 2024 06:46 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ''ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆடை கட்டுப்பாடு இல்லை என அரசு கூறியபோது யாரும் கேள்வி எழுப்பாதது ஏன். எந்த ஆடையை வேண்டுமானாலும் அணிந்து கொண்டு கோவிலுக்கு வந்தால், மத சுதந்திரம் காக்கப்படுமா,'' என சிந்தனையாளர் ஹிரேமகளூரு கண்ணன் கேள்வி எழுப்பினார்.

மைசூரு கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில், நேற்று கர்நாடக கோவில் சங்கங்கள் சமிதி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், சிந்தனையாளர் ஹிரேமகளூரு கண்ணன் பேசியதாவது:

கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது; அரசுக்கு சொந்தமானது அல்ல. நம் முன்னோர், நமது கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க விட்டு சென்ற சொத்துகள் அவை. பராமரிப்புக்காக அரசிடம் கொடுத்து உள்ளோம்.

நமது கலாசாரம், மக்களின் சடங்குகள் நிலைத்திருக்க, கோவில் அர்ச்சகர் தொழில் ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் முடிவுகளும் ஏற்புடையது அல்ல.

கோவில்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதிகளாக மாறுகின்றன. அது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கோவிலும் மனிதனின் ஆபத்பாந்தவனாக உள்ளது.

நான் கன்னடத்தில் மந்திரம் சொன்னதாக சில பழமைவாதிகள் எரிச்சல் அடைந்தனர். நாம் கூறும் மந்திரம் அனைவரும் புரிந்து கொண்டால் மட்டுமே உள்ளடக்கம் சாத்தியமாகும்.

ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆடை கட்டுப்பாடு இல்லை என அரசு கூறியபோது யாரும் கேள்வி எழுப்பாதது ஏன். எந்த ஆடையை வேண்டுமானாலும் அணிந்து கொண்டு கோவிலுக்கு வந்தால், மத சுதந்திரம் காக்கப்படுமா.

இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக கோவில் சங்கங்கள் சமிதி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், பாரத மாதா படத்துக்கு சிந்தனையாளர் ஹிரேமகளூரு கண்ணன் மலர் துாவினார். இடம்: மைசூரு.






      Dinamalar
      Follow us