சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
ADDED : பிப் 01, 2024 04:32 PM

சென்னை: சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,01) விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் இல்லை
அப்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது. வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை. அரசின் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது.
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீட்டு பலன் பெறுவது பாதிக்கப்படும். வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பெற முடியாத நிலை ஏற்படும். கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.