sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

/

மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

4


UPDATED : பிப் 21, 2026 05:31 AM

ADDED : பிப் 21, 2026 01:27 AM

Google News

4

UPDATED : பிப் 21, 2026 05:31 AM ADDED : பிப் 21, 2026 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்பார்வையிட, பணியிலுள்ள அல்லது ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'மேற்கு வங்க அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையே நிலவும் நம்பிக்கையற்ற சூழலால், இதை செய்வதை தவிர வேறு வழியில்லை' என, நீதிமன்றம் குறிப்பிட்டது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் ஏப்., - மே மாதங்களில், தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தை போலவே இங்கும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு ஆளும் திரிணமுல் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

குற்றச்சாட்டு



மேற்கு வங்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கியிருந்தது.

தொடர்ந்து, பெயரில் பிழைகள் போன்ற முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, 1.38 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்த்து, மேற்கு வங்க அரசு மற்றும் திரிணமுல் காங்., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப் பட்டன.

இவற்றை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

'எஸ். ஐ.ஆர்., பணிக்கு போதிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை மேற்கு வங்க அரசு வழங்கவில்லை' என, தேர்தல் கமிஷன் குற்றஞ்சாட்டியது. இதை திட்டவட்டமாக மறுத்த மேற்கு வங்க அரசு, தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.

கடந்த 4-ல் நடந்த விசாரணையில், உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டசபை தேர்தலுக்கு முன், மேற்கு வங்கம் குறிவைக்கப் படுவதாகவும், வாக்காளர்கள் நீக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், இது போன்ற அளவுகோல் பா.ஜ., ஆளும் அசாமில் ஏன் பயன்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

கடந்த விசாரணையில், 'எஸ்.ஐ.ஆர்., பணிகளை நிறைவு செய்வதில் எந்தவொரு தடைகளையும் மேற்கு வங்க அரசு உருவாக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம்.பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முரண்பாடு



அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மே ற்கு வங்கத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., பணியை விரைந்து முடிப்பதே தற்போதைய முக்கிய பிரச்னை. இந்த விவகாரத்தில் பல்வேறு இடைக்கால உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டு உள்ளன.

ஆனா ல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க அரசுக்கும், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் தேர்தல் கமிஷனுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு நிலவுகிறது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்பார்வையிட, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

இந்த சிக்கலை தீர்க்க, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதிகளை கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்.

இவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுபட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள் குறித்த புகார்களை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுப்பர்.

இவர்களுக்கு தேர்தல் கமிஷனின் நுண் பார்வையாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உதவி செய்வர். எஸ்.ஐ.ஆர்., பணியில் மாவட்ட நீதிபதிகள் ஈடுபட உள்ளதால், வழக்குகள் தேக்கமடையும் என்பதும் எங்களுக்கு தெரியும்.

இதனால், வழக்கின் அவசர தன்மைக்கு ஏற்றபடி, வேறு நீதிமன்றங்களுக்கு மாற்ற உயர் நீதிமன்ற பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடும் நீதித் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும்.

துணை பட்டியல் ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் 28ல், வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், நீதித் துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்படும் பெயர்கள், பின், துணை பட்டியலாக வெளியிடப்படும்.

எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க டி.ஜி.பி.,-க்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு மூலம், மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us