sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைப்பு குறித்து... விசாரிக்க ஒன்றுமில்லை !  சுப்ரீம் கோர்ட்

/

 முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைப்பு குறித்து... விசாரிக்க ஒன்றுமில்லை !  சுப்ரீம் கோர்ட்

 முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைப்பு குறித்து... விசாரிக்க ஒன்றுமில்லை !  சுப்ரீம் கோர்ட்

 முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைப்பு குறித்து... விசாரிக்க ஒன்றுமில்லை !  சுப்ரீம் கோர்ட்

1


ADDED : ஜன 21, 2025 02:57 AM

Google News

ADDED : ஜன 21, 2025 02:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திய விவகாரம் ஏற்கனவே முடிந்துபோன விஷயம். அதில், மேலும் எதையும் விசாரிக்க வேண்டியது இல்லை' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அணையின் பாதுகாப்பு, நீர்மட்ட அளவை குறைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் கூடுதல் மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என, தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உண்மையில்லை


இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களை கவனத்தில் வைத்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 120 அடிக்கும் கீழ் குறைக்க உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் முன்வைத்த வாதம்:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியும் அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரியும் பல்வேறு மனுக்கள் புதிதாக தாக்கல் செய்யப்படுகின்றன. இவை எதிலும் உண்மை இல்லை.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என, உச்ச நீதிமன்றமே பலமுறை உறுதிபடுத்தி உள்ளது. வள்ளக்கடவு முதல் பேபி அணை வரையிலான 5 கி.மீ., பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

அதற்காக இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக, 15 மரங்களை அகற்ற வேண்டி இருக்கிறது என, தமிழக அரசு பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

ஆட்சேபனை


இது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதும் கேரள அரசுதான். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால் அதற்குமுன், அணையை பராமரிக்கும் பணிகளை தமிழக அரசு முழுமையாக மேற்கொள்ள கேரள அரசு அனுமதிக்க வேண்டும். அதை செய்யாமல் அணையை ஆய்வு செய்ய அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கேரள அரசு தரப்பு வழக்கறிஞர், 'அணை பாதுகாப்பு தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. அதை மேற்கொள்ள தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அணை கேரள மாநிலத்தில் இருக்கிறது; ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் கேரளா தான் பாதிக்கப்படும்' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியாக உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுவிட்டது. எனவே அதுகுறித்து மேற்கொண்டு விசாரிப்பதற்கு எதுவும் இல்லை.

அதே நேரத்தில் அணையின் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு மாநில அரசுகளும் ஒருவரை ஒருவர் குறைகூறி வந்தால், தீர்வு என்பதே கிடைக்காது. எனவே அணையை மேலும் பலப்படுத்துவது குறித்த விவகாரங்களை மட்டும் விசாரித்து முடிவு எடுக்கலாம்.

முக்கிய கேள்வி


அதற்குமுன், அணை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா, என்ற மிக முக்கிய கேள்வி எழுகிறது.

எனவே, இது தொடர்பாக தமிழக மற்றும் கேரள அரசுகள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம், 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us