ADDED : ஜூன் 20, 2026 05:08 PM

மும்பை: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு சிவசேனா மட்டுமே உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பேசியதாவது: ஒரு காலத்தில் சாத்தியமற்றது என கருதப்பட்ட அனைத்து பணிகளையும் மோடி அரசு நிறைவேற்றி உள்ளது.
மேற்கு வங்க மக்கள் பாஜவுக்கு தங்களது ஆசிர்வாதத்தை வழங்கி உள்ளார்கள். மேற்கு வங்க எல்லை வழியாக நடந்து வந்த ஊடுருவல் நிறுத்தப்படும். ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.
உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே பிரிவு எனக்கூறினோம். தற்போது பிரிவு ஏதும் இல்லை. இருப்பது ஒரே சிவசேனா மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.
உத்தவ் தாக்கரே சிவசேனாவை உடைக்க ஆப்பரேஷன் டைகர் என்ற பெயரில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தவ் தாக்கரே ஆதரவு எம்பிக்கள் 6 பேர் கொறடா உத்தரவை மீறி கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர்களது பதவி பறிக்கப்படும் என உத்தவ் தாக்கரே தரப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் ஒரே சிவசேனா மட்டுமே உள்ளது என அமித்ஷா பேசியுள்ளார்.
