கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி
கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி
ADDED : ஏப் 01, 2024 09:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கான ஆதாரம் உள்ளது என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
திமுகவும், காங்கிரசும் காட்சிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவும், காங்கிரசும் இணைந்து கச்சத்தீவை தாரை வார்த்தமைக்கு ஆதாரம் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தங்களின் குடும்பத்தினரை மட்டுமே சிந்திக்கிறது.
தமிழக மீனவர்களை வஞ்சிக்கிறது. மீனவர்களுக்கென எதுவும் செய்யவில்லை. மீனவர்கள் நலனை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

