ADDED : நவ 17, 2024 11:04 PM
மங்களூரு: ''முடா மனை விஷயத்தில், தவறு செய்திருந்தால், என் உறவினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
மங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
விவசாயிகளின் நிலத்தை நேரடியாக, முடா கையகப்படுத்தியிருந்தால் அவர்களுக்கு 50 - 50 அடிப்படையில், மனை வழங்க வேண்டும். இந்த மனைகள் தவறாக பயன்படுத்தி இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உறவினராகவே இருந்தாலும், சட்டவிரோதமாக நடந்திருந்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் இடத்தை முழுமையாக கையகப்படுத்தினால், நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண தொகை வழங்கவில்லை என்றால், வீட்டுமனை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சட்டப்படி என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கொடுத்தே ஆக வேண்டும்.
சென்னப்பட்டணா தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு, நான் செல்லவில்லை. என்னை யாரும் அழைக்கவில்லை. பிரசாரகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெறவில்லை. ஏன் அப்படி செய்தனர் என்பது, எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.