ADDED : ஏப் 21, 2025 03:16 AM

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தவர்கள் அடிமட்ட அளவில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்ப வேண்டும். அதற்காக அனைத்து சமூகத்தினரையும் வீட்டுக்கு அழையுங்கள். 'ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு' என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
- மோகன் பகவத்
தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
கூட்டணி தொடரும்!
வரும் 2027ல் நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் இணைந்து பா.ஜ., வை தோற்கடிப்பர். இண்டி கூட்டணி தற்போதும் உள்ளது; 2027 தேர்தலிலும் தொடரும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
ஆயுதப்படை சட்டம்!
மேற்கு வங்கத்தில் கலவரம் நடப்பதற்கு முன், மக்கள் அது குறித்து எச்சரித்த வீடியோக்கள் தற்போது பரவி வருகின்றன. ஆனால், முதல்வர் மம்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு இங்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
திலீப் கோஷ்
முன்னாள் எம்.பி., - பா.ஜ.,