தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அஜித் பவார் சென்ற விமானத்தில் கோளாறு இல்லை: உரிமையாளர் பேட்டி

அஜித் பவார் சென்ற விமானத்தில் கோளாறு இல்லை: உரிமையாளர் பேட்டி

அஜித் பவார் சென்ற விமானத்தில் கோளாறு இல்லை: உரிமையாளர் பேட்டி


UPDATED : ஜன 28, 2026 10:31 PM

ADDED : ஜன 28, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2026 10:31 PM ADDED : ஜன 28, 2026 09:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: '' மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இல்லை. நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது,'' என அந்த விமான நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், இன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர், பயணித்த விமானமானது டில்லியைச் சேர்ந்த விஎஸ்ஆர் ஏவியேஷன் நிறுவனத்தின் லியார்ஜெட் 45 விமானம் ஆகும். இந்த லியார்ஜெட் 45 ரக விமானம் கடந்த 2023 ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியிருந்தது.

தற்போது இந்த ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், விஎஸ்ஆர் ஏவியேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் விகே சிங் கூறியதாவது: விமானங்கள் அனைத்தும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. அதன் தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கிடையாது. இந்த விமானங்களை தரையிறக்க மாட்டோம். அனைத்தும் தகுதி வாய்ந்த விமானங்கள். அவற்றை தரையிறக்க வேண்டிய அவசியம் என்ன?உலகம் முழுவதும் நம்பகமான விமானமாக லியெர்ஜெட் ரக விமானங்கள் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த விமானங்களை தரையிறக்க வேண்டிய அவசியம் என்ன. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவை சேர்ந்த பில் லியார் என்பவரால் இந்த லியெர்ஜெட் ரக விமானம், சுவிட்சர்லாந்துக்காக 8 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கினார். பிறகு 1990 ம் ஆண்டு கனடாவை சேர்ந்த பாம்பர்டையர் நிறுவனம் இதனை கையகப்படுத்தியது. 2021ம் ஆண்டு இந்த ரக விமானத்தை நிறுத்துவதை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us