பழிவாங்கும் அரசியல் இருக்காது: சொல்கிறார் பட்னவிஸ்
பழிவாங்கும் அரசியல் இருக்காது: சொல்கிறார் பட்னவிஸ்
UPDATED : டிச 05, 2024 10:34 PM
ADDED : டிச 05, 2024 10:31 PM

மும்பை : '' மஹாராஷ்டிராவில் அடுத்த ஐந்தாண்டுகள் மாற்றத்திற்கான அரசியல் இருக்குமே தவிர, பழிவாங்கும் அரசியல் இருக்காது,'' என முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பட்னவிஸ் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவுகள், மக்களின் அன்பு, எதிர்பார்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையில் மாநிலம் தொடர்ந்து முன்னேறிச்செல்லும். அடுத்த ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை வழங்குவோம். மாநிலத்தில் மாற்றத்திற்கான அரசியல் தான் இருக்கும். பழிவாங்கும் அரசியல் இருக்காது.ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் என்னுடன் உள்ளனர். கூட்டணியானது அதன் வேகத்திலும், திசையிலும் உறுதியாக உள்ளது. எங்களின் பணி மட்டுமே மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.