தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இரவு முழு சூரிய கிரகணம்!

இன்று இரவு முழு சூரிய கிரகணம்!

இன்று இரவு முழு சூரிய கிரகணம்!

3


UPDATED : ஆக 12, 2026 11:23 AM

ADDED : ஆக 12, 2026 09:45 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : ஆக 12, 2026 11:23 AM ADDED : ஆக 12, 2026 09:45 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

இந்நாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று (ஆகஸ்ட் 12) இரவு வருகிறது; இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது.

சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, குறுக்கே வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் அதன் நிழல் பூமியில் விழுகிறது. இதுதான் சூரிய கிரகணம். இந்தமுறை முழு சூரிய கிரகணம் 2 நிமிடம் நீடிக்கும். இந்த ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் இன்று ஆக. 12ல் நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கிரீன்லாந்து, வடக்கு ரஷ்யா, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் சில பகுதி, அமெரிக்காவின் சில பகுதிகளில் இது தெரியும். இந்திய நேரப்படி இரவு 11:16 மணிக்கு முழு சூரிய கிரகணம் தெரியும். இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூகவலைதள நேரலை மூலம் காண முடியும்.

27 ஆண்டுகளுக்கு

ஐரோப்பா 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் முழு சூரிய கிரகணத்தைக் காணவிருக்கிறது. மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய கண்டப் பகுதிகளில் இருந்து கடைசியாக 1999-ல் முழு கிரகணம் காணப்பட்டது. அதன் பிறகு, எந்தவொரு முழு கிரகணப் பாதையும் மத்திய அல்லது மேற்கு ஐரோப்பிய கண்டத்தைக் கடந்து செல்லவில்லை.

அமெரிக்காவில் முழுமையான கிரகணம் ஏற்படாது. இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் நிகழும். அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் 26 மாகாணங்களில் கிரகணத்தின் ஒரு பகுதியையாவது காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகுதி சூரிய கிரகணத்தைக் காண்பவர்கள் அனைவரும் சான்றளிக்கப்பட்ட கிரகணக் கண்ணாடிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்; முறையான பாதுகாப்பு இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கிரகணத்தைக் காணுமாறு நாசா அமெரிக்கர்களை வலியுறுத்தி உள்ளது.

அடுத்து…

அடுத்த ஆண்டும், 2027 ஆகஸ்ட் மாதத்தில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அந்த கிரகணத்தையும் இந்தியாவில் இருந்து காண முடியாது. வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே பார்கக முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us