ADDED : ஏப் 01, 2025 12:09 AM

வக்பு வாரிய சொத்துகளை ஆக்கிரமித்த நபர்களே, அதற்கான சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கின்றனர். அவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் அதில் சில உள்ளடக்கம் இருக்க வேண்டும்.
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
முடிவு கட்ட வேண்டும்!
நாட்டின் பொது கல்வி முறையை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு படுகொலை செய்து வருகிறது. இந்த அரசு கல்வித் துறையை தனியார்மயமாக்கி வருகிறது. பள்ளிப் பாடப் புத்தகங்களில், வகுப்புவாதம் புகுத்தப்படுகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
சோனியா
பார்லி., குழு தலைவர், காங்.,
காலனித்துவ மனநிலை!
சுதந்திரம் அடைந்த பின், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டை காலனித்துவ மனநிலையில் காங்., வைத்திருந்தது. வகுப்புவாதம், தாஜா அரசியல், உறவினர்களுக்கு சலுகை அளிப்பதன் அடிமைத்தனத்தை அக்கட்சி புத்தகங்களில் ஊக்குவித்தது.
தருண் சுக்
தேசிய பொதுச்செயலர், பா.ஜ.,
