என்னையும் கூப்பிடுறாங்க; சொல்கிறார் ராபர்ட் வாத்ரா
என்னையும் கூப்பிடுறாங்க; சொல்கிறார் ராபர்ட் வாத்ரா
UPDATED : அக் 24, 2024 04:31 PM
ADDED : அக் 24, 2024 04:24 PM

புதுடில்லி: ''இதுவரை நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த பிரியங்கா, தற்போது தேர்தலில் போட்டி என்ற அவருக்காக முடிவு எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.
ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான கேரள மாநிலம் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அவரது கணவர் ராபர்ட் வாத்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரியங்கா அவருக்காக முடிவு எடுத்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 35 ஆண்டுகளாக அவரை பார்த்து வருகிறேன். அவர் குடும்பத்திற்காகவும், மற்றவர்களுக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்து வருகிறார். அவரைப் பற்றி அவர் எப்போதும் சிந்தித்து கிடையாது. வயநாட்டில் அவரை போட்டியிட வைப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அவரது தந்தை ராஜிவ் இருந்தாலும் இதனை பார்த்து பெருமைப்பட்டு இருப்பார்.
வெறும் பிரசாரம் மட்டும் செய்யாமல், பார்லிமென்டிற்கு அவர் செல்ல வேண்டும் என எனக்கு விருப்பம் இருந்தது. நான் அரசியலுக்குள் நுழைந்து பார்லிமென்டிற்குள் செல்ல வேண்டும் என மக்கள் விரும்பினால், அப்போது, சரியான முடிவை எடுப்பேன். நான் மொராதாபாத் நகரில் பிறந்தவன். அங்கு போட்டியிட்டு, அவர்களின் பிரதிநிதியாக நான் இருப்பதை அப்பகுதி மக்கள் விரும்புவார்கள். ஆனால், நான் எங்கு சென்றாலும், அரசியலுக்கு வாருங்கள் என என்னிடம் கூறுகின்றனர். எப்போது காங்கிரஸ் விரும்புகிறதோ, குடும்பம் உத்தரவிடுகிறதோ அப்போது எனது தீர்மானம் உறுதியாக இருக்கும். இவ்வாறு வாத்ரா கூறினார்.