என்னை கண்டு பயப்படுகிறார்கள்; பிரசாரத்தில் கெஜ்ரிவால் வியப்பு
என்னை கண்டு பயப்படுகிறார்கள்; பிரசாரத்தில் கெஜ்ரிவால் வியப்பு
UPDATED : மே 14, 2024 05:32 PM
ADDED : மே 14, 2024 05:12 PM

சண்டிகர்: என்னை கண்டு பா.ஜ.,வினர் பயப்படுகிறார்கள் என டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 50 நாள் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கெஜ்ரிவால் ரோட்ஷோ நடத்தினார். அவரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள் வரவேற்றனர்.
ரோடுஷோவில் கெஜ்ரிவால் பேசியதாவது: டில்லி மக்களுக்கு எல்லா மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் நான் ஜெயிலுக்குப் போன பிறகு 15 நாட்கள் எனக்கு இன்சுலின் கொடுக்கவில்லை.
என்னை கண்டு பயமா?
தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். மக்கள் அனைவரும் ஆம்ஆத்மி கட்சி சின்னத்தின் பட்டனை அழுத்தினால், நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. மார்ச் 16ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
என்னை மார்ச் 21ம் தேதி சிறையில் அடைத்தனர். தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க சதி செய்தனர். இதற்கு அர்த்தம் என்னை கண்டு பா.ஜ.,வினர் பயப்படுகிறார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

