தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்வதே நோக்கம்!'

'பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்வதே நோக்கம்!'

'பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்வதே நோக்கம்!'


UPDATED : ஆக 16, 2026 03:46 PM

ADDED : ஆக 16, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 03:46 PM ADDED : ஆக 16, 2026 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 11 ஆண்டுகளாக, பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள, கடலுார் மாவட்டம், விளாகம் கிராமத்தைச் சேர்ந்த, 52 வயதாகும் மகேஷ் ஆனந்த்:

எங்களுடையது விவசாய குடும்பம். சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில், 18 ஆண்டுகள் வேலை பார்த்தேன். நல்ல சம்பளம் கிடைத்தாலும், பணிச்சூழலால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு சிரமப்பட்டேன். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, 2015ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரில் குடியேறினேன்.

எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில், முதலில் இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தேன். பின், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கி, மொத்தமாக 7 ஏக்கரில், 11 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களை சேகரிப்பதற்காக, பல வெளி மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். நான் தேடி வரும் மிகவும் அரிதான நெல் ரகங்கள் எவ்வளவு குறைந்த அளவில் கிடைத்தாலும் வாங்கி, மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்வேன்.

விதை நெல் உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் பரவலாக்கத்திற்காக, 1 ஏக்கரில், 365 விதமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்து வருகிறேன். துல்லியமான திட்டமிடலுடன் குறைந்த பரப்பில், அதிக நெல் ரகங்களை பயிர் செய்து வருகிறேன்.

தரமான விதை நெல்லை உற்பத்தி செய்து, பரவலாக்கம் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். விதை நெல்லை விற்பனை செய்வதில்லை; பாரம்பரிய நெல் சாகுபடியில் புதிதாக ஈடுபடுவோருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவேன்.

என் நிலத்தில், 'விதைப்போம்; அறுப்போம்' என்ற கோட்பாட்டை தான் செயல்படுத்துகிறேன். நெல் அறுவடை முடிந்ததும், வைக்கோலை நிலத்திலேயே போட்டு விடுவேன். இதனால் களைகள் வளராது; மண்ணில் ஈரப்பதமும் இருக்கும்; வைக்கோல் மட்கி, மண்ணை வளப்படுத்தி விடும். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் பூச்சிகளும், நோய்களும் தாக்குவதில்லை.

இயற்கை உரத் தேவைக்காக, இரண்டு நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். வருமானத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சம்பா பட்டத்தில், 6 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

இதில், 1 ஏக்கருக்கு 1,440 கிலோ நெல் கிடைக்கும். அவற்றை அரைத்தால், 900 கிலோ அரிசி கிடைக்கும். 1 கிலோ 90 ரூபாய் என்று விற்பனை செய்தால், 81,000 ரூபாய் வருமானமும், எல்லா செலவுகளும் போக 50,000 ரூபாய் லாபமும் கிடைக்கும். இதன்படி, 6 ஏக்கர் நெல் சாகுபடி வாயிலாக ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு: 98840 22505.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us