sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

/

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

12


UPDATED : டிச 15, 2025 09:06 PM

ADDED : டிச 15, 2025 10:24 AM

Google News

UPDATED : டிச 15, 2025 09:06 PM ADDED : டிச 15, 2025 10:24 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக ஜோர்டானுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் அவரை நேரில் வரவேற்றார்.

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முதலில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக மோடி இன்று மாலை சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், மோடியை வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை காண அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் குவிந்தனர். கலை நிகழ்ச்சி நடத்தி மோடியை வரவேற்றனர். அவர்கள், பிரதமருடன் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இப்பயணத்தில் அந்நாட்டு மன்னரை சந்திக்கும் மோடி, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

ஜோர்டான் அரண்மனையில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு மன்னர், பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.

பின்னர் அவர் டிசம்பர் 16ம் தேதி எத்தியோப்பியாவிற்கு செல்கிறார். இந்த பயணம் முடிந்த பிறகு, டிசம்பர் 17ம் தேதி ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்தியாவும் ஓமனும் பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு, வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே உறவை கொண்டுள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

நன்றி

ஜோர்டான் சென்றடைந்த பிறகு பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜோர்டானில் விமான நிலையம் வந்து என்னை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பு இந்த பயணத்தால் வலுப்பெறும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us