தேர்தலை பற்றியல்லாமல் அடுத்த தலைமுறையை பற்றி சிந்தனை: ராஜ்நாத் சிங்
தேர்தலை பற்றியல்லாமல் அடுத்த தலைமுறையை பற்றி சிந்தனை: ராஜ்நாத் சிங்
ADDED : ஜூன் 12, 2026 07:36 PM

ஐதராபாத்: அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதை காட்டிலும், அடுத்த தலைமுறையைப் பற்றி மட்டுமே பாஜ சிந்திக்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
செகந்திராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளில் மட்டும் அல்லாமல் அவர்களின் எண்ணங்களிலும் நேர்மை உள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதை காட்டிலும், அடுத்த தலைமுறையைப் பற்றி மட்டுமே பாஜ சிந்திக்கிறது. எங்களின் எண்ணம் தெளிவாக உள்ளது. எங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மற்றும் வார்த்தைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் வேறுபாடு இருக்காது. பிரதமர் மோடியின் வாழ்க்கை நேர்மை மற்றும் ஒழுக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
மோடி பிரதமர் ஆன பிறகு, நாட்டின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகையானது ரூ.2.5 லட்சம் கோடியில் இருந்து 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படுகிறது.
2014க்கு முன்பு, போபர்ஸ் ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஊழல், டாட்ரா டிரக் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் ஆகியவற்றை தேசம் பார்த்தது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
