ADDED : அக் 01, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சட்டசபைக்கு மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
90 இடங்களை கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு செப்.18, செப்.25, என இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
மொத்தம் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5,030 ஓட்டுச்சாவடிகளில் 39.18 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.