திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை: ராஜ்யசபாவில் நிராகரிப்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை: ராஜ்யசபாவில் நிராகரிப்பு
ADDED : டிச 05, 2025 01:40 PM

புதுடில்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், திமுக எம்பிக்களின் கோரிக்கையை, ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்துவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், நிறைவேற்ற திமுக அரசு மறுத்துவிட்டது. தற்போது தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது.
திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இடம் நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால் அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த முடியாது எனக் கூறி, திமுக எம்பிக்கள் கோரிக்கையை சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். இதனால் திமுக எம்பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

