sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பரங்குன்றம் விவகாரம்: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

/

திருப்பரங்குன்றம் விவகாரம்: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் விவகாரம்: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் விவகாரம்: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

6


ADDED : ஜன 23, 2026 09:50 PM

Google News

ADDED : ஜன 23, 2026 09:50 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- டில்லி சிறப்பு நிருபர் -

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய மனு மீது பதிலளிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்:திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை சுற்றி எப்போதும் சர்ச்சை தொடர்கிறது. கோவிலின் புராதனத்தை காப்பாற்றும் வகையில், கோவில் முழுதையும் மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணில், 24 மணி நேரமும் நிரந்தரமாக விளக்கு ஏற்றி வைக்க உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாள் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை முழுதும் தீபங்களை ஏற்றி முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை ஒத்தி வைத்தது.






      Dinamalar
      Follow us