sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா, அமெரிக்காவிற்கு இது ஒரு மகத்தான செய்தி; பிரதமர் மோடி பெருமிதம்

/

இந்தியா, அமெரிக்காவிற்கு இது ஒரு மகத்தான செய்தி; பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா, அமெரிக்காவிற்கு இது ஒரு மகத்தான செய்தி; பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா, அமெரிக்காவிற்கு இது ஒரு மகத்தான செய்தி; பிரதமர் மோடி பெருமிதம்

20


UPDATED : பிப் 07, 2026 09:00 AM

ADDED : பிப் 07, 2026 08:58 AM

Google News

20

UPDATED : பிப் 07, 2026 09:00 AM ADDED : பிப் 07, 2026 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு மகத்தான செய்தி, இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை வெளியாகி உள்ளது. வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் அர்ப்பணிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியா, அமெரிக்கா இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவை மேலும் ஆழப்படுத்தும். உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் நிலையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும். உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us