ADDED : பிப் 18, 2026 03:06 AM

இது துக்ளக் கமிஷன்!
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை பா.ஜ., தொழில்நுட்பப் பிரிவு நீக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறும் தேர்தல் கமிஷன், சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல் நடத்துகிறது. பா.ஜ.,வை திருப்திப்படுத்த இது, 'துக்ளக்' கமிஷனாக இயங்குகிறது.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
மவுனம் காப்பது ஏன்?
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெ ண்கள் நுழையும் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் மவுனம் காப்பது ஏன்? இந்த விவ காரத்தில், தெளிவான நிலைப்பாட் டை மாநில அரசு எடுக்க வேண்டும். பாரம்பரிய நடைமுறைகளில் நீதித்துறை தலையீட்டை அரசு ஏற் கக்கூடாது.
வி.டி.சதீசன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்.,
ராகுல் தகுதியற்றவர்!
காங்., தலைமை பொறுப்புக்கு ராகுல் முற்றிலும் தகுதியற்றவர். அவரது அணுகுமுறை புரிந்து கொள்ள முடியாதபடி உள்ளது. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியவில்லை. அனைவரையும் சமமாக நடத்தாததுடன், காந்தி கு டும்ப மனநிலையிலே யே இருக்கிறார். ஒரு தலைவர் அனைவரையும் சந்திக்க வேண்டும்.
நவ்ஜோத் கவுர் காங்., முன்னாள் நிர்வாகி

