திரிணமுல் காங்கிரசின் அர்த்தம் இதுதான்: பா.ஜ., புது விளக்கம்
திரிணமுல் காங்கிரசின் அர்த்தம் இதுதான்: பா.ஜ., புது விளக்கம்
ADDED : ஏப் 09, 2024 12:54 PM

புதுடில்லி: ' திரிணமுல் காங்கிரசின் (டி.எம்.சி) அர்த்தம். டி (பயங்கரவாதம்), எம் (மாபியா) மற்றும் சி (ஊழல்)' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றின் தலைமை பதவியில் இருப்பவர்களை மாற்றக்கோரி நேற்று டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: யாருக்காக திரிணமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது? திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பயங்கரவாதத்தை உருவாக்கும் மக்களுடன் நிற்கிறார்கள்.
சோதனை நடத்த சென்ற, என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். திரிணமுல் காங்கிரசின் (டி.எம்.சி) அர்த்தம், டி - டெரர் (பயங்கரவாதம்), எம் - மாபியா மற்றும் சி - கரப்சன் (ஊழல்). மேற்குவங்கத்தில் மக்கள் பாதுகாப்பாக இல்லை. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

