அன்றைய பாரதம் இப்படி இருந்திருந்தால் இது தான் நடந்திருக்கும்: ஜெய்சங்கர்
அன்றைய பாரதம் இப்படி இருந்திருந்தால் இது தான் நடந்திருக்கும்: ஜெய்சங்கர்
ADDED : ஜன 04, 2024 10:54 AM

புதுடில்லி: ''இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும்'' என மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் நேருவுக்கு, சர்தார் பட்டேலுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவுக்கு விட்டு கொடுப்பது தொடர்பாக அப்போதைய முதல்வருக்கு நேரு கடிதம் எழுதியுள்ளார். நேரு சீனாவுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளித்தார். கடந்த காலங்களில் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும். இது என்னுடைய கற்பனையான ஒன்று அல்ல. இந்தியாவின் சொந்த நலன்களின் அடிப்படையில் அமெரிக்க உறவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் அமெரிக்காவை நமது சொந்த நலன்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.