கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யணும்; மஹா., துணை முதல்வர் கொந்தளிப்பு
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யணும்; மஹா., துணை முதல்வர் கொந்தளிப்பு
ADDED : ஆக 25, 2024 07:15 AM

மும்பை: 'பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும்,'' என்றார், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத்பவார் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா, தானே அருகே பத்லபூர் மழலையர் பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதையறிந்த ஊர் மக்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தண்டியுங்கள்
மஹாராஷ்டிராவில் பெண்களுக்கான நலத்திட்டம் துவக்கி வைத்து, துணை முதல்வர் அஜீத் பவார் பேசியதாவது: சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்ட எவரையும் விட்டு வைக்க கூடாது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
சட்ட நடவடிக்கை
நம்முடைய பெண் பிள்ளைகள் மீது கை வைப்பவர்கள், அதைப் பற்றி இரண்டாவது முறை கூட நினைக்காத வகையில் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். என் மொழியில் சொல்வதென்றால், மீண்டும் குற்றம் நடக்காமல் இருக்க, அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

