தொடர்ந்து அச்சுறுத்தும் அழைப்புகள்: 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தொடர்ந்து அச்சுறுத்தும் அழைப்புகள்: 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ADDED : அக் 22, 2024 07:53 PM

பெங்களூரு: இன்று 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீப நாட்களாக, இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால், விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன, விமானப் பயணங்கள் தாமதமாகின்றன. இது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய
பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமான நிறுவனங்களின் 50 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இன்று மட்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று இரவு முதல் அச்சுறுத்தல்களைப் பெற்ற மொத்த விமானங்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 169 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்திருக்கின்றன.
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவின் தலா 13 விமானங்களும், ஆகாசா ஏரின் 12 விமானங்களும், விஸ்தாராவின் 11 விமானங்களும் அச்சுறுத்தல்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்தாராவின் தலா 10 விமானங்களுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது, மூன்று ஜெட்டாவுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்கள், சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இவ்வாறு விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, மேற்கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.