ADDED : நவ 08, 2024 10:53 PM
மங்களூரு:' சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கொலை செய்த மூவருக்கு துாக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தட்சிண கன்னடா, மங்களூரு புறநகரில் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, 2021 நவம்பர் 21ம் தேதி, திடீரென மாயமானார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்ததை மங்களூரு ஊரக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
அதே பகுதியில் உள்ள டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்த ஜெயசிங், 29, முகேஷ், 27, மனீஷ் திர்கி, 30, ஆகிய மூவரும் சிறுமியை கடத்தி, தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர். மூவரும் கூட்டாக சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இவர்கள் பீஹார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
ஜெயசிங், முகேஷ் சிங், மனீஷ் திர்கியை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். விசாரணையை முடித்து, தட்சிண கன்னடா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், மூவருக்கும் துாக்குத் தண்டனை விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.