பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து: மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து: மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ADDED : ஆக 28, 2024 11:28 AM

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அருணாச்சல பிரதேசத்தில், சுபன்சிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹவில்தார் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆகிய 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.
இரங்கல்
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,' 3 ராணுவ வீர்களின் சோகமான மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் துணை நிற்கும். துணிச்சலான ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.