ADDED : அக் 17, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
செப்டம்பர் 30ம் தேதி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் தேவேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அக்டோபர் 2ம் தேதி அஜய் என்பவரையும், 4ம் தேதி கோபால் என்பவரையும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 625 கிராம் ஹெராயின், 5 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப் பொருளை கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 2.52 கோடி ரூபாய்.