பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; காஷ்மீரில் வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; காஷ்மீரில் வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
ADDED : ஆக 07, 2025 12:21 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,) வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழந்தது. இந்த வாகனம் 187வது பட்டாலியனுக்கு சொந்தமானது.
இந்த விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார், இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
கட்வா பகுதியில் ராணுவ நடவடிக்கையை முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.