தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ரூ.1.32 கோடி மோசடி சைபர் திருடர் மூவர் கைது 

ரூ.1.32 கோடி மோசடி சைபர் திருடர் மூவர் கைது 

ரூ.1.32 கோடி மோசடி சைபர் திருடர் மூவர் கைது 


ADDED : ஏப் 12, 2025 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு ஹலசூருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் வங்கியில், போலீஸ் அதிகாரிகள் போல நடித்து 1.32 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக ஹலசூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து சைபர் கிராம் போலீசார் விசாரணை நடத்தினர். சைபர் திருடர்களான மூவரும், தனியார் வங்கியில் தங்களை போலீஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர். சைபர் மோசடிகளில் சிக்கி, முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் உள்ள தொகையை விடுவிக்குமாறு, தனியார் வங்கியின் மெயில் ஐடிக்கு குறுந்தகவல் அனுப்பினர்.

வங்கி அதிகாரிகள் நம்புவதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட 18 நீதிமன்ற உத்தரவுகளையும் சேர்த்து அனுப்பினர். மேலும், மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, விரைவாக பணத்தை விடுவிக்குமாறு கோரினர்.

இதனை நம்பிய வங்கி அதிகாரிகள் 1.32 கோடி ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். இதன் பின், அவர்களை தொடர்பு கொண்ட போது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை வங்கி அதிகாரிகள் உணர்ந்தனர்.

விடுவிக்கப்பட்ட தொகை; எந்த வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டது என்பது பற்றி விசாரித்ததில், புதுடில்லியை சேர்ந்த சாகர் லகுரா, நீரஜ் சிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளியான ராஜஸ்தானை சேர்ந்த அபிமன்யு குமாரை, பெங்களூரு கிழக்கு சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 62 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us