உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 11, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் அல்லுாரி சீதாராம ராஜு மாவட்டத்தில் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஹூகும்பேட்டா மண்டலில் உள்ள ஜம்புவாலசா கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று சென்றனர்.
அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், 'செல்பி' எனப்படும், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவர்களில் ஒரு சிறுமியை மீட்டனர். திரிஷா, 17, ரத்ன குமாரி, 16, பவித்ரா, 16, ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.
