உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 15, 2026 01:28 AM

அ நிறம் | அளவு
போபால்: மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள டோங்கலன் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
காலை 11:30 மணிக்கு திடீரென பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிழம்புடன் கரும்புகை சூழ்ந்ததால் தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். வெடிவிபத்தால் கட்டட கூரை பறந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்.
'பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது உடல்கள் கூரையை பிய்த்து கொண்டு பறந்தன' என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
